ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற பெயரில் கைதிகளை விடுவித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி நீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (09-06-2025) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகக் கூறி, அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை தவறாக விடுவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க சிறைச்சாலை ஆணையாளர் (செயற்பாட்டு) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.