ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியை வௌியிட்டார் ஜனாதிபதி!



நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அணைத்து இஸ்லாமியர்களுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையாகக் கருதப்படும் மக்கா யாத்திரையின் காரணமாக தனித்துவமானதாக அமைகின்றது எனவும் மதம், மானிட சமூகத்தை மனித நேயத்துடன் பூரணப்படுத்தவும், நல்ல சமுதாயத்தை உருவாக்கவும் எதிர்பார்க்கிறது. 

உலகம் முழுவதிலுமிருந்து வருகை தருகின்ற அனைத்து முஸ்லிம்களும் ஒற்றுமையுடன் இறைவனை வணங்குவதற்காக மக்காவிற்கு வரும் இந்த ஹஜ் யாத்திரை, ஏனைய அனைத்து மதங்களுடனும் சமத்துவமாக வாழும் போதனையை உள்ளடக்கியது என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

உலக மக்கள் அனைவரின் இதயங்களிலும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் தியாக உணர்வுகளை உருவாக்கும் ஹஜ் கொண்டாட்டம் உலக அமைதிக்கான ஒரு சிறந்த செய்தியாகும் எனவும் இந்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூர்ய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் அணைத்து இஸ்லாமியர்களுக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை