சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!



சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா இன்று (26-06-2025) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வாக்கு மூலம் அளிக்க ஆணையத்தின் முன் முன்னிலையான பின்னர் அவர் காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கில் சந்திரகுப்தா 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.


இந்த வழக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனும் தொடர்புடையது.

அவர் கைது செய்யப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
புதியது பழையவை