சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான யோகா தின நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன், விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையம், நடாத்திய சர்வதேச யோகா தின நிகழ்வானது நேற்று(21-06-2025) ஆம் திகதி காலை மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் தலைமையில் இடம் பெற்றது.
சுவாமி உமாதீஷானந்தஜி மஹராஜ் அவர்கள்
( உதவிப்பொது முகாமையாளர் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு)
விசேட அதிதி
கலாநிதி. T. பிரதீபன் அவர்கள்
(பல்கலைக்கழக நூலகர், ஊவாவெல்லஸ பல்கலைக்கழகம், இலங்கை)
கௌரவ அதிதிகள்
திரு. சிவம் பாக்கியநாதன் அவர்கள் (மாநகர முதல்வர், மாநகரசபை, மட்டக்களப்பு)
திரு. வைரமுத்து தினேஸ்குமார் அவர்கள் (பிரதி மாநகர முதல்வர், மாநகரசபை, மட்டக்களப்பு)
Dr.C. வாமதேவன் அவர்கள் (உளநல மருத்துவர், போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு)
திரு. K. மதிவண்னன் அவர்கள்
(நிர்வாக உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், மட்டக்களப்பு மற்றும் தலைவர், குருகுல பழைய மாணவர் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன் மட்டக்களப்பு)
யோகா நிருவனத்தின் உயரதிகாரிகள், யோகா கலை பயிற்றுவிப்பாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.