21 June 2025 எவ்வாறு மேற்குலகு தங்கள் நாடுகள் விஞ்ஞானிகள் கண்டு பிடித்த புதிய ஆயுதங்களை பரிசோதிக்கும் களமாக பாலஸ்தீன காசாவையும் சிரியா ஈராக் லெபனான் போன்ற அறபு இஸ்லாமிய நாடுகளை பயன்படுத்தி அங்கே இருந்த அப்பாவி மக்களையும் கொன்று ஆட்சி தலைவர்களையும் அழித்து ஒழித்து அந்த நாடுகளின் நிலங்களை கந்தக பூமியாக்கி இன்பம் கண்டு அதே ஆயுதங்களை விளம்பரப்படுத்தி தங்களது ஆயுத வலிமையை விற்பனை செய்ததோ
தற்போது அதே ஒரு நிலையை ஈரான் இஸ்லாமிய குடியரசானது தனது சுய உற்பத்தி புதிய ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் பரிசோதிக்கும் களமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மண்ணையும் அதன் ஆட்சியையும் அதற்கு ஆதரவு வழங்கும் அமெரிக்காவையும் அடிமை இஸ்லாமிய பெயர் கொண்ட அறபு நாடுகளையும் மாற்றி தனது ஏவுகணைகளை தினமும் பரிசோதித்து வருகின்றது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை வேண்டி கடந்த 50 வருடங்களாக எதிர்பார்த்து இருந்த ஈரானுக்கு தற்போதுதான் அந்த பாக்கியம் கிடைத்தது ,அது மாத்திரமன்றி தான் செறிவூட்டி பாதுகாத்து வரும்.யூரேனியத்தையும் அதன் மூலம் தயாரிக்க உள்ள அணு ஆயுதத்தையும் கூட பரிசோதித்து பார்க்கும் களமாக இந்த யுத்தத்தையும் அதற்கான களமாக இஸ்ரேலிய தேசத்தையுமே அது தெரிவும் செய்து வைத்துள்ளது.
ஏற்கனவே இரண்டு தடவைகள் இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்குலகமும் இஸ்லாமிய ஈரானிய அணு ஆயுத உற்பத்தையை அழிக்கும் முயற்சியில் வெற்றி அடைந்த போதிலும் அவற்றில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட ஈரானும் அதன் விஞ்ஞானிகளும் ராணுவமும் தற்போது யூரேனிய செறிவூட்டும் இடங்களை சுமார் 300 அடிகளுக்கும் ஆழமான பாரிய காண்கிறீட் அணைகளுக்கு கீழே அமைத்து இருப்பதோடு தனது ஏவுகணைகளை கூட பாரிய மலை முகடுகளை குடைந்து அவற்றின் இடையே தளங்களை அமைத்து பாதுகாத்து வைத்து ஒரு இருப்பதோடு தேவைப் படும் வேளைகளில் அவற்றை வெளியே கொண்டு வந்து இஸ்ரேல் மீது ஏவி வருகின்றது.
பலவகையான புதிய வகை ஏவுகணைகளை தயாரித்து அவற்றின் செயல் திறனை பரிசோதித்து பார்ப்பதற்காக தற்போது களம் இறக்கி இஸ்ரேல் மீது ஏவி பரிசோதித்து வரும் ஈரான் இவற்றுக்கெல்லாம் இஸ்ரேல் அடங்காத பட்சத்தில் உள்நாட்டில் கடந்த இரண்டு தடவைகளில் மிக இரகசியமான முறையில் தான் மேற்கொண்ட அணுகுண்டு பரிசோதனைகளை வெற்றிகரமாக மீண்டும் இஸ்ரேலிய மண்ணில் இஸ்ரேலுக்கு எதிராக பரிசோதித்து தனது அனு ஆயுத வல்லமையை முழு சர்வதேசத்திற்கும் பறைசாற்றும் என்று நம்பலாம்.
நான் அறிந்தவரை இஸ்ரேலிய வலிந்த தாக்குதலோடு ஈரான் அதற்கான முடிவையும் அதன் சகல ராணுவ கட்டமைப்புகளுக்கும் கட்டளையிடும் தளபதியான அதன் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா கொமெனி அவர்களது வழிகாட்டுதலின் மூலம் ஏற்கனவே பெற்றுக் கொண்டு விட்டது என்றே நான் நம்புகின்றேன்.
இஸ்ரேலிய வலிந்த தாக்குதல் ஆரம்பித்து சுமார் 10 மணித்தியாலங்கள் இடைவெளி விட்டு ஈரானிய ஆன்மீகத் தலைவர் இஸ்ரேலிய தாக்குதலின் தன்மையை ஆராய்ந்த பின்னர் பதிலடிக்கான அனுமதியை தனது ராணுவத்துக்கு வழங்கி அதன் பிரகாரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரகமான ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் இஸ்ரேல் மீது அனுப்பி அவற்றின் தாக்குதல் திறன்களை பரிசோதித்து வரும் ஈரான்
இதுவரை சர்வதேச நாடுகள் மேற்கொண்ட சகல விதமான தாக்குதல் நிறுத்த முஸ்தீபுகளையும் நிராகரித்து இன்னும் இஸ்ரேலுக்கான பதிலடியை தான் நிறைவு செய்யவில்லை என கூரி தாக்குதலை தொடர்வதன் அர்த்தம் ஈரான் ஆனது இன்னும் தனது ஏவுகணைகளை பரிசோதிக்க காலம் இருக்கின்றது அதற்கான தயாரிப்புகளும் இருக்கின்றது என்பதனால் தான் ஆகும்.
ஏற்கனவே யூத அமெரிக்க தாக்குதலை எதிர்பார்த்து அவர்களை ஏமாற்றுவதற்காக டம்மி ஏவுகணைகளையும் ஏவுகணை நிலைகளையும் ராடர் நிலைகளையும் அமைத்து தன் மீது தாக்குதல் நடத்திய இசை வெளிய விமானப்படைகளை ஏமாற்றி அவர்களின் f35 விமானங்களையும் சுட்டு வீழ்த்தி அதன் விமானங்களையும் கைது செய்து வைத்திருக்கும் ஈரான்
இன்னும் சில நாட்களுக்கு தனது பாரிய அகோர தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளையும் கிளஸ்டர் ஏவுகணைகளையும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பரிசோதித்து விட்டு ஓரளவுக்கு ஓய்வு பெரும் என நான் நம்புகின்றேன்,
அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் 14 தினங்கள் அவகாசம் கொடுத்திருப்பதற்கு முன் ஈரான் தனது பரிசோதனைகளை யூத மண்ணில் நிறைவு செய்துவிட்டு அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் முடிந்தால் இதன் பின்னர் என்னுடன் மோதிப் பாருங்கள் என சவால் விடும்.
அந்த சவால் விடுவதற்கு முன்னர் நிச்சயம் இறைவன் உதவியால் யூத மண் ஆனது கந்தக மண்ணாகவும் காசாவின் மறு வடிவமாகவும் மாற்றம் பெற்றிருக்கும் அத்தோடு அமெரிக்காவுக்கு வால் பிடித்து திரிந்த அரபு இஸ்லாமிய நாடுகள் ஈரானிய இஸ்லாமிய தலைமைக்கு கட்டுப்பட்ட அரபுலகமாகவும் மாற்றம் பெற்று தங்களது நாடுகளில் இருக்கும் அமெரிக்க தளங்களை வெளியேற்றும் முடிவுக்கும் வந்திருப்பார்கள்
இந்த விடயங்கள் நடைபெறும் வரை பொறுத்திருப்போம்!
தாக்குதல்கள் தொடரும்போது எனது பதிவுகளும் தொடரும் .
குறிப்பு
இதுவரை கத்தார் நாட்டில் இருந்த நான் பல விடயங்களை இது விடயமாக எனது ஆக்கங்களில் எழுத முனைந்த போதும் நான் இருந்த நாடு இரண்டு பக்கமும் நடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் நாடுகளின் அணியோடு இருந்தமையால் பல விடயங்களை எழுத முடியாமல் போனது ,அந்த நாட்டு சட்டமும் புலனாய்வு பிரிவுகளும் மிக உண்ணிப்பாக எல்லாவற்றையும் அவதானித்து வந்தன ,
ஆனால் இப்போது எனது தாய் மண்ணில் நான் இருப்பதால் அன்று எழுத முடியாமல் போன விடயங்களையும் சற்று எழுதலாம் என்ற நிலையில் இன்னும் பல விடயங்களை எழுத நினைத்துள்ளேன் இன்ஷா அல்லாஹ்!