மட்டக்களப்பு கன்னங்குடாவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் காயம்



மட்டக்களப்பு மாவட்டம் வவுனதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னங்குடா கண்ணகி அம்மன் ஆலய வீதியில் இன்று (02-06-2025) ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற துப்பிக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீர் விநியோகம் தொடர்பாக இருவருக்கு இடையே நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதன் காரணமாக வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டுத் துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்
சந்தேக நபரிடமிருந்த உள்நாட்டுத் துப்பாக்கியும் வவுணதீவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை