உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்தில் தஞ்சமடைந்த 06 யானைகள் உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டன.
உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 06 யானைகளை உடவளவ சரணாலயத்திற்கு விடுவிக்கும் பணி நேற்று (17-07-2025) சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்றது.
தாயின் அன்பை இழந்து சுமார் 05 ஆண்டுகளாக உடவளவ யானைகள் பராமரிப்பு நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 06 யானைகள் இவ்வாறு உடவளவை சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன.