ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இலங்கை அணியில் இடம்பிடித்த மட்டக்களப்பு வீராங்கனைகள்



2025.October. 25-31 திகதிகளில் Bahrain இல் நடைபெற உள்ள  இளையோருக்கான ஆசியன் கபடி சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக 25 பேர் கொண்ட அணியில்  இலங்கை இளையோர் கபடி அணி சார்பாக மட்டக்களப்பு  கோரகல்லிமடு ஸ்ரீ ரமண மகரிஷி வித்தியாலய மாணவர்கள் 5 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஆசிய இளையோர் அணியை தேர்வு செய்வதற்காக 16/07/2025 அன்று கொழும்பில் நடைபெற்ற தெரிவின் படி 14 பேர் கொண்ட அணிக்கான இறுதி கட்ட தெரிவில் கோரகல்லிமடுவைச் சேர்ந்த பு.திருஸ்சனா ,      தி.நிஷாளினி ,  தெ.பிதுர்ஷா, சி.பேமிதா ஆகியவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

அத்தோடு இத் தெரிவில் கலநௌதுகொண்ட  T.யுனக்சன் 0.5 புள்ளி வித்தியாசத்தில் தமது தெரிவை இழந்தார். 

இதற்கு சிறந்த முறையில் கடின பயிற்சிகளை வழங்கி, சரியான முறையில் வழிகாட்டி இவ்வாறான ஒரு அடைவுமட்டத்தை அடைய காரணமாய் அமைந்த  ஆசிரியர் து. மதன்சிங் அவர்களுக்கும்  மற்றும் பாடசாலை பயிற்சிவிப்பாளர் கோகலிகா மற்றும் விதுசிகா, இந்திகா, அனுசா , நிலக்க்ஷினி மற்றும் ரேணுஜன் அவர்களுக்கும் அத்தோடு பாடசாலை அதிபர்  இளங்கோவன் அவர்களுக்கும் மட்/ககு/ கோரகல்லிமடு ரமண மகரிஷி பாடசாலை சமூகத்திற்கும்  மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கோரகல்லிமடு கணேஷ் விளையாட்டு கழகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றனர்.
புதியது பழையவை