181 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் பெண் கைது!


கனேடிய பெண் ஒருவர் 181 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இன்று(22-07-2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின், மொன்ட்ரியலிலிருந்து டோகா வழியாக வந்த கனேடிய பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.




சந்தேக நபரின் பொருட்களிலிருந்து
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரின் பொருட்களிலிருந்து 18,123 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையை இலங்கை சுங்க திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேற்கொண்டுள்ளது.
புதியது பழையவை