திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தையான (38)வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று(01-07-2025) 1.30 மணி அளவில் குறித்த நபர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள குளக்கட்டு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த போது பாம்பு தீண்டியதாக அயலவர்கள் தெரிவிக்கிற்றனர்.
யோகராசா தில்லைவாசகம் என்னும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான (38) வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் .