ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவின் விளக்கமறியல் ஜூலை 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் ஆஜரான சந்தேகநபரை ஜூலை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
விமான கொள்முதல் ஒப்பந்தங்களில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான இடம்பெற்று வரும் விசாரணையின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) நிஷாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரின் தலைமையில் எடுக்கப்பட்ட முக்கிய நிதி முடிவுகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.