கிழக்கு கடற்கரையில் மனித எச்சங்கள்



கிழக்கு கடற்கரையில் மனித எச்சங்கள்.. திடீரென இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப்பணி
சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்றையதினம் (20/07/2025) குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்ளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளது.              

கடந்த வியாழக்கிழமை (17/07/2025) மூதூர் சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி 
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டு கண்ணி வெடி அகற்றும் பணி இடம்பெற்றது.

சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எலும்புப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மூதூர்கிழக்கு சம்பூரில் கடந்த 1990ஆம் ஆண்டு யூலைமாதம் 07ஆம் திகதி இரணுவம் மற்றும் முஷ்லிம் ஊர்காவல்படையினரால் படுகொலை செய்யப்பட்ட 57 தமிழர்கள அதனை அண்மித்த காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை தற்போதைய எதிர்கட்சி தலைவர் சஜீத்தின் தந்தையார் பிரமதாசா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையாகும்.

அந்த படுகொலையானவர்களுடைய எலும்புக்கூடுகளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

புதியது பழையவை