ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் மத்தியில் இன்று (23-07-2025)ஆம் திகதி இடம்பெற்றது.
மாமாங்கேஸ்வரப் பெருமானின் அருளாசியைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், நாளைய (24-07-2025) தினம் ஆடியமாவாசை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.