மட்டக்களப்பு மாவட்டம் திக்கோடை இளைஞர் விவசா திட்டம் மலைக் காட்டுப் பகுதியில் நஞ்சு அருந்தி விட்டு உயிர் இழந்த நிலையில் சடலமாக கிடப்பதை இன்று (15-07-2025)ஆம் திகதி விறகு எடுக்க சென்ற மக்கள் அவதானித்து உள்ளனர்.
அதன் பின்னர் தகவலைப் வெல்லாவெளி பொலிஸாருக்கு தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில்....
உயிரிழந்தவர் 36 வயதுடைய குமாரசிங்கம் ரவி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்த ரவி என்பவர் களுவுந்தன்வெளியை பிறப்பிடமாகவும் திக்கோடையை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இறந்து இரண்டு அல்லது மூன்று நாட்களாக இருக்கலாம் என வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.