கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து - இருவர் உயிரிழப்பு!



இன்று (15-07-2025)ஆம் திகதி காலை மஹியங்கனை–பதுளை வீதியில் மஹாவலி வியான கால்வாயில் கார் கவிழ்ந்ததில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து வாகனத்தை கால்வாயில் இருந்து மீட்க உதவியுள்ளனர்.

வாகனத்திற்குள் இரண்டு பேர் கண்டெடுக்கப்பட்டதுடன், அவர்கள் உடனடியாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், வைத்தியசாலையில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை