யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தங்கராஜா காண்டீபன் சி.ஐ.டி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஒரு மணி நேரம்
நேற்று, (22.07.2025) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரன் பரந்தனில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.