பாணந்துறையில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர், இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று (30-07-2025) ஆம் திகதி காலை தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர், நேற்று (29-07-2025) இரவு இரத்தினபுரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இன்று காலை 7:03 மணியளவில், பொலிஸ் அதிகாரி கழிப்பறைக்குச் செல்ல கதவைத் திறந்தபோது, தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி, அங்கம்மன பகுதியைச் சேர்ந்த இவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார். குறித்த சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.