விளையாடிக்கொண்டிருந்த போது - கோல் கம்பம் சரிந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு!



யாழ்ப்பாணத்தில் கால் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது , இளைஞர் ஒருவர் மீது கோல் கம்பம் சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை பகுதியை சேர்ந்த யுவராஜ் செபஸ்தியம்பிள்ளை எனும் 29வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவாந்துறை சென் மேரிஸ் வியைாட்டுக்கழக மைதானத்தில் நேற்றைய தினம் (21-07-2025) சக வீரர்களுடன் கால் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது , கோல் காப்பாளராக நின்ற இளைஞன் மீது கம்பம் சரிந்து விழுந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த இளைஞனை மைதானத்தில் நின்றவர்கள் மீட்டு , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
புதியது பழையவை