மட்டக்களப்பில் 2 மூட்டைபோடும் அதிசய கோழியை கொன்ற நபர்.!


இலங்கையில்   தினமும் இரண்டு முட்டைபோடும் கோழி ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.  

பாலமுனை கூட்டுறவு சங்கத்திற்கு முன்பாக உள்ள கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடையில் கோழி ஒன்று தினமும் இரண்டு முட்டைகளை இட்டுள்ளது.


 6 நாட்களும் 12 முட்டை
குருநாகல் பிரதேசத்திலிருந்து அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட சிவப்பு நிறக் கோழியே 6 நாட்களும் 12 முட்டைகளை தொடர்ச்சியாக இட்டுள்ளது.

இந்நிலையில் கோழியை, அந்த கடையின் உரிமையாளர் தாளங்குடவை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துவிட்டார்.


அவர், கோழியை வாங்கிச் சென்று கழுத்தை அறுத்து குடல்களை வெளியே எடுத்தபோது, அதன் வயிற்றுக்குள்ளும் இரண்டு முட்டைகள் இருந்துள்ளன என கடையின் உரிமையாளர் முகமது அஸ்மான் தெரிவிக்கிறார்.

மிக நீண்ட நாட்களாக கோழி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் தான் ஒவ்வொரு நாளும் இரண்டு முட்டைகளை இடும் கோழியை முதன்முறையாக கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
புதியது பழையவை