2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்க் கொண்டு இன்று (06.08.2025) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கும் மேலதிகமாக, பரீட்சை தொடர்பான கேள்விகள் அல்லது அதுபோன்ற உள்ளடக்கம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று பரிந்துரைக்கும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் அல்லது விளம்பரங்களை ஒன்லைன் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக பொது மக்கள் பொலிஸ் (119) அல்லது பரீட்சை திணைக்களத்தின் (1911) துரித இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
அல்லது 0112 784208, 0112 784537 என்ற எண்கள் மூலமும் முறையிடலாம் என்று என்று திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.