முல்லைத்தீவில் இரு கார் மோதி விபத்து.!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இன்று (18.08.2025) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார் கட்டு பகுதியில் வீதியில் திருப்ப முற்பட்ட போது மற்றொரு காருடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.



இதில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை