ஹபரணை வீதியில் பாரவூர்தி மோதி யானை குட்டி உயிரிழப்பு.!

தம்புள்ளை – ஹபரணை வீதியில் ஹிரிவடுன்ன பகுதியில் பாரவூர்தி மோதி யானை குட்டி ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (27.08.2025) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை