பாணந்துறை, வந்துரமுல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் - ஒருவர் உயிரிழப்பு!

பாணந்துறை, வந்துரமுல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் அமைந்துள்ள இரவு ஒரு வீட்டிற்கு நேற்று (27.08.2025) மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் அலுபோகஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


கொலைக்கான காரணம் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இன்னும் அடைாயளம் காணப்படவில்லை.

மேலும் சம்பவம் குறித்து பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை பொலிஸாரின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் சுமார் 86 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


இதில் 47 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 51 பேர் காயமடைந்தனர்.
புதியது பழையவை