மட்டக்களப்பு ஓட்டமாவடி- கொழும்பு பிரதான வீதியில் சூடுபத்தினசேனை சந்தியில் இன்று (23.08.2025)அதிகாலை டிப்பரும் காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்தவர்கள் கொக்கட்டிச்சோலை நோக்கிப்பயணித்துக்கொண்டிருந்த காரும் வாழைச்சேனையிலிருந்து புணானை நோக்கிப்பயணித்த டிப்பரும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணித்த மூவர் காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், கார் முற்றாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.