வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா. கலாரஞ்சினி ஊடக சந்திப்பு!


நீண்டு செல்லும் செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினுடைய தலைவி. யோகராசா. கலாரஞ்சினி இன்று(22.08.2025)தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏற்பாட்டில்  எதிர்வரும் முப்பதாம் திகதி(30.08.2025)  வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலும்  கிழக்கு மாகாணத்திலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட இருக்கிறது.

இந்த போராட்டம் தொடர்பில் இன்று(22-08-2025) கிளிநொச்சியில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது   சங்க அலுவலகத்தில் மேற்கொண்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது செம்மணி புதைகுழி  தொடர்பில் சர்வதேச விசாரணை ஊடாகவே இந்த காணமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்கும்  என்பதே என்பதாகும் என்று குறிப்பிட்ட அதே நேரம் வடக்கு கிழக்கில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைக்காகவும் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளுக்காகவும் நீதி கிடைக்க ஒன்று திரள ஒரு ஓரணியில் திரண்டு தங்களுக்கு நீதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
புதியது பழையவை