மனித உரிமைகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என கலாநிதி பிரதிபா மகாநாமகேவா தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக எந்த தடையையும் விதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக நாடுகளின் மனித உரிமைகள் குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்தது.
நீதிக்கு புறம்பான கொலைகள்
இதற்கமைய, இலங்கை தொடர்பில் 25 பக்கங்களை கொண்ட ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அத்துடன், மனித உரிமைகளை மீறும் அதிகாரிகளைக் கண்டறிந்து தண்டிக்க அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனவும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இலங்கையில் நடந்த நீதிக்கு புறம்பான கொலைகள் தொடர்பாக எழுதப்பட்ட குறிப்புகளும் அறிக்கையில் அடங்கியுள்ளது.
அத்துடன், ஜனவரி மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்கு இடையில் தடுப்புக் காவலில் இருந்தபோது நடந்த 7 மரணங்கள் குறித்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.