அரசாங்க வளங்களின் மூலம் நிதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.08.2025) குற்றப் புலனாய்வுப் பிரிவில் (CID) முன்னிலையானார்.
இந்த விசாரணை ரணில் விக்ரமசிங்க நியூயோர்க்கிற்கும் பின்னர் லண்டனில் நடந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்துக்கு சென்றமை தொடர்பில் கவனம் செலுத்துகின்றது.
லண்டன் பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அது அரசு நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
10 பேர் கொண்ட குழுவை உள்ளடக்கிய இந்தப் பயணத்திற்கு அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 16.9 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக சிஐடி மதிப்பிடுகிறது.
விசாரணையின் ஒரு பகுதியாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரை புலனாய்வாளர்கள் ஏற்கனவே விசாரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.