அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் செப்டெம்பரில் ஆரம்பம்- அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு.!

அரசாங்கம் செப்டெம்பர் மாதம் முதல் பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் வட மாகாணத்தில் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும், வன்னிப் பிராந்தியத்தின் முல்லைத்தீவுப் பகுதியை மையமாகக் கொண்ட புதிய “தென்னை முக்கோணம்” என்பதில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“செப்டெம்பர் முதலாம் திகதி முதல், இந்த வருடம் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் அரசாங்கம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும். யாழ்ப்பாணம், மண்டைதீவில் சர்வதேச விளையாட்டு வளாகம் ஒன்றை ஆரம்பித்தல் இதில் அடங்கும்” என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மக்களுக்கு கச்சேரியில் கடவுச்சீட்டு பெறுவதில் உள்ள நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும் அபிவிருத்தித் திட்டத்தில் அடங்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்த சேவை இப்போது ஒரு இணைய அமைப்பு (online system) மூலம் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

"இந்த முயற்சிகள் மூலம் தேசிய மட்டத்திலான அபிவிருத்திப் பயணத்தை ஆரம்பிக்க நம்புகிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார்.
புதியது பழையவை