இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் தெரிவித்தாவது” இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில், அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் பொது அதிகாரிகள் உட்பட 63 பேர் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் கீழ் நாம் கைது செய்துள்ளோம். அதிலும் குறிப்பாக இலஞ்சக் குற்றச்சாட்டில் 34 பேரும், ஊழல் குற்றச்சாட்டில் 29 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது மட்டுமல்லாது இவ்வாறு கைது செய்யப் பட்டவர்களில் ஏழு அரசியல்வாதிகள்,
முன்னாள் அரசியல்வாதிகள் , அரசியல்வாதிகளின் உறவினர்கள் 5 பேர் மற்றும் பொது மக்கள் 9 பேர் அடங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை 2024 ஆம் ஆண்டில் இலஞ்ச குற்றச்சாட்டில் பொது அதிகாரிகள், முன்னாள் பொது அதிகாரிகள் 58 பேரும் பொதுமக்கள் 28 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அந்தவகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் மொத்தமாக 86 பேர் கைது செய்யப்பட்டனர்” இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.