பகிடிவதையில் ஈடுபட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் 6 மாணவிகள் 9 மாணவர்கள் கைது!

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் 6 மாணவிகள் மற்றும் 9 ஆண் மாணவர்களை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.

அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் 24 முதல் 26 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முறைப்பாடுகளின் அடிப்படையில்,   நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் புதன்கிழமை (03.09.2025) கைது செய்யப்பட்டனர்.
புதியது பழையவை