நேற்றிரவு வெளியாகிய தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா அவர்கள் 187 புள்ளிகளை பெற்று கிழக்கு மாகாணத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகூடிய மதிப்பெண்களை பெற்ற மாணவியாக சாதனை படைத்து கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார்.
ஒரு அதிகஷ்ட பிரதேச பாடசாலையில் கல்வி கற்ற ஒரு மாணவி கிழக்கு மாகாணத்தில் முதலாவது இடத்தை பெறுவது என்பது சாதனைக்குரிய விடயமே.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் எல்லைப்புற கிராம பாடசாலை மாணவி இவ்வாறான ஒரு சாதனை படைத்திருப்பது அனைவராலும் வியர்ந்து பார்க்கப்படுகிறது.
நகரப்புற பாடசாலைகளுக்கு நிகராக கிராமப்புற மாணவர்களும் கல்வியில் சாதனைகளை படைக்க ஆரம்பித்துள்ளனர்.
இவை ஆரம்பங்கள் மட்டுமே. இதைவிட பெரியளவிலான சாதனைகள் கிராமப்புற மாணவர்களால் எதிர்காலத்தில் படைக்கப்படலாம் அதற்கெற்றால்போல் வலயத்தை கட்டமைக்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி அதிகாரிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.
அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளை மாத்திரம் கொண்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து இம்முறை பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 4 மாணவர்கள் சட்டத்துறைக்கும் 6 மாணவகள் பொறியியல்துறைக்கும் தெரிவானதுடன் மருத்துவத்துறை கலைத்துறை முகாமைத்துவதுறை தொழிநுட்பத்துறை என அனைத்து துறைகளிலும் பெரும்பாலான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு பிரவேசிக்கின்றனர். கிழக்கில் பிற்பட்ட நாளில் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அதித வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளை பெற்று கிழக்கு மாகாணத்தில் சாதித்த பிறைசூடி அபிரிஜா அவர்களுக்கும் மற்றும் வழிப்படுத்திய அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை கல்விச் சமுகம் மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறோம்.