மட்டக்களப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட நால்வருக்கு இடமாற்றம்.!

மட்டக்களப்பில் பிரதி பொலிஸ்மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 4 பேரை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள்> பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்ற அனுமதியை அடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்ட நுவன் மெண்டிஸ் மீண்டும் கொழும்புக்கு நேற்று முன்தினம் உடனடியாக இட மாற்றப்பட்டுள்ளார்.

அதேவேளை வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பிரியந்த மற்றும் களுவாஞ்சிக்குடி உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பண்டார இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை ஆயித்தியமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகர் தென்னிலங்கை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை