சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு.!

உள்ளூராட்சி வார தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக கல்முனை மாநகர சபை வளாகத்திலும் மற்றும் சில இடங்களிலும் இன்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் பயன்தரும் மர நடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் கணக்காளர் மனாஸிர் அஹ்சன், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம்.நயீம், உள்ளூராட்சி உதவியாளர் சர்ஜுன் தாரிக் அலி, சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம்.டிலிப் நெளஸாத் உட்பட மாநகர சபை உத்தியோகத்தர் பலரும் பங்கேற்றிருந்தனர்.

அதேவேளை சுற்றாடல் பாதுகாப்பு வேலைத் திட்டத்தின் ஓர் அங்கமாக கல்முனை கிரீன் பீல்ட் உட்பட பல இடங்களும் விஷேடமாக துப்பரவு செய்யப்பட்டதுடன் குருந்தியடி உள்ளிட்ட சில இடங்களில் டெங்கு ஒழிப்புக்கான புகை விசிறும் நடவடிக்கையும் முன்ணெடுக்கப்பட்டன.
புதியது பழையவை