மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி தபால் அலுவலகத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்திலிருந்து முற்றாகப் பாதிப்புற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது, இதனை புனருத்தாரணம் செய்து மக்கள் பாவனைக்கு விடவேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் மிக நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வந்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (18.09.2025)வியாழக்கிழமை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு, இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

29.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் புதிதாக நிருமானிக்கப்படவுள்ளது.

இக்காரியாலயம் நீண்டகாலமாக பழுதடைந்துள்ளதனால் களுவாஞ்சிகுடி தபாலக நடவடிக்கைகள் வாடகை கட்டடத்திலேயே தற்போது வரைக்கும் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் மக்கள் கோரிக்கைக்கு இணங்க இன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாகக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், பிரதி அஞ்சல் மா அதிபர் உசித்த உலங்கமே, கிழக்கு மாகாண தபால் மா அதிபர் சி.பிரகாஷ், மற்றும், அரச உயர் அதிகாரிகள், தபால் நிணைக்கள அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதியது பழையவை