மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு – ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில், உள்ள பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியில், ஆயுதங்கள் இருப்பதாக, பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்தில் இன்று (09.09.2025) சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது புதைக்கபட்டிருந்த நிலையில் அடைக்கப்பட்ட வாளியொன்றினுள் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.