தந்தை செல்வா என்றால் யார் அவர் மேற்கொண்ட தமிழ்தேசிய பணிகள், போராட்டங்கள், ஒப்பந்தங்கள் எவை?
1976ல், ஏன் வட்டுக்கோட்டையில் தந்தைசெல்வா அப்படி ஒரு தீர்மானம் எடுத்தார்? அந்த தீர்மானத்தில் என்ன உள்ளது.?
அதற்கு பின்னர் ஏன் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர்?
எத்தனை இயக்கங்கள் ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டத்தில் கரந்தடி தாக்குதல்களை மேற்கொண்டனர்?
கரந்தடி போராட்டம் என்றால் என்ன?
மரபுப்படையணி என்ரால் என்ன?
இலங்கை இந்திய ஒப்பந்தம் எப்போது கைச்சாத்தானது யார், யார் அதில் கையொப்பம் இட்டனர்?
இந்த ஒப்பந்தத்துக்குப்பின்னர் 2009, மே,18, வரை போராடிய இயக்கம் எது?
அதன் தலைவர் யார்?
தியாகி திலிபன் ஏன் உண்ணாவிரதம் இருந்தார்?
அவர் முன்வைத்த 05, கோரிக்கைகளும் எவை?
அன்னை பூபதி ஏன் உண்ணாவிரதம் இருந்தார் ?
அவர் முன்வைத்த 02,கோரிக்கைகள் எவை?
தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது?
ஆரம்பத்தில் அதில் எத்தனைகட்சிகள் இருந்தன? பின்னர் விலகிய கட்சிகள் எவை? பின்னர் இணைந்த கட்சிகள் எது?
2009, மே,18, க்கு பின்னர் தற்போது எத்தனை தமிழ்தேசியகட்சிகள் உள்ளன?
அவர்கள் ஒன்றாக இணைய முடியாமைக்கான காரணம் என்ன?
கார்திகை,27, மே,18, செப்டம்டர்,26, ஏப்ரல்,19, யூலை,05, இதுபோன்ற தினங்கள் ஏன் முக்கிய தினங்களாக கருதப்படுகிறது?
அரசியல் தீர்வு என்ரால் என்ன? சமஷ்டி கொள்கை என்றால் என்ன? ஏக்கியராச்சிய என்ரால் என்ன?
ஐநா மனித உரிமை ஆணையகம் எங்கே உள்ளது?
உள்நாட்டு பொறிமுறை என்ரால் என்ன?
சர்வதேச பொறிமுறை என்ரால் என்ன?
இதுபோன்று இன்னும் அநேகமானவை 1948, தொடக்கம்,2025, வரையான தமிழ்த்தேசிய வரலாறுகளை அறிவதும், புரிவதும் அனைவரினதும் கடமை..
அப்போதுதான் தமிழ்தேசிய அரசியல் தொடர்ந்து நிலைக்கும், இல்லை எனில் ஒரு கட்டத்தில் மௌனித்துவிடும்..
இப்படியான பல வினாக்களுக்கு விடைகளை தமிழ் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், இளைஞர் யுவதிகளுக்கும் பெற்றோர், தமிழ் உணர்வுமிக்க ஆசிரியர்கள், தனியார் வகுப்பு ஆசிரியர்கள்,அறநெறி வகுப்புக்களில் எல்லாம் தமிழ்த்தேசிய இனத்தின் வரலாறுகளை அவ்வப்போது உத்தியோகபற்றுக்கு அப்பால் இனப்பற்றுடன் அறிவுரைகளை வழங்கினால் நல்லது.
-பா.அரியநேத்திரன்-
22/09/2025