நுகர்வோர் விவகார அதிகாரசபை, 2025 ஜனவரி முதல் ஓகஸ்ட் மாதம் வரை நடத்திய சோதனைகளின் அடிப்படையில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 14,682 எனவும் அதில் 2,800 சோதனைகள் அரிசி சந்தைகளில் நடத்தப்பட்டுள்ளன எனவும் அதில் 915 சோதனைகள் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பானவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிசி சோதனைகளுக்காக 95 மில்லியன் ரூபாய் அபராதம் நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பது குற்றமாகக் கருதப்படுவதால், குற்றவாளிகளுக்கு 100,000 ரூபாய் முதல் 500,000 ரூபாய் வரை அபராதம், அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.