யானை தாக்கி இளைஞன் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதி.!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான், திகிலிவெட்டை பிரதேசத்தில் வைத்து நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளான நிலையில் இளைஞரொருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் அதே பிரதேசத்தைச்சேர்ந்த 25 வயதுடைய கொவிதரன் என்பவராவார்.

தெய்வாதீனமாக பலத்த காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளதுடன், கை முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புதியது பழையவை