மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் - ஞா.சிறிநேசன் எம்பி காயம்!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று(14.)9.2025) இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமுன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் காயமடைந்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனமும் காரும் மோதி இடம்பெற்ற விபத்திலேயே இவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை