ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி!

நபி­ய­வர்­களின் முன்­மா­திரி, இன்று நாம் எதிர்­கொள்ளும் சமூக சவால்­களை முறி­ய­டித்து, சமத்­துவம், சட்­டத்தை மதித்தல் மற்றும் நல்­லொ­ழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நமது முயற்­சி­களில் ஒளி­வி­ளக்­காக இருக்கும் என்று தான் நம்­பு­வ­தாக ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்­துள்ளர்.

தேசிய மீலாத் தினத்­தை­யொட்டி ஜனா­தி­பதி விடுத்­துள்ள செய்­தி­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.


அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உல­கெங்­கிலும் வாழும் முஸ்­லிம்­களால் மிகவும் மரி­யா­தை­யுடன் கொண்­டா­டப்­படும் முஹம்மத் நபி அவர்­களின் பிறந்த தின­மான, மீலாதுன் நபி தின­மாகும்.

இறுதி நபி­யான முஹம்­மது நபி அவர்கள், சன்­மார்க்க சமு­தா­யத்தைக் கட்­டி­யெ­ழுப்பத் தம்மை அர்ப்­ப­ணித்து, அதற்­காகப் பெரும் பணியை ஆற்­றி­யவர். இஸ்­லா­மிய ஒழுக்க நெறியை நிறு­வு­வதில் முன்­னோ­டி­யா­கவும் அவர் திகழ்ந்தார். அக்­கால சமூ­கத்­திற்கு இஸ்­லாத்தின் செய்­தியை முன்­வைப்­பதில் நபிகள் நாயகம் கடு­மை­யான துன்­பங்­களை அனு­ப­வித்தார். அத்­த­கைய தரு­ணங்­க­ளிலும் கூட, அவர் பொறு­மை­யையும் மௌனத்­தையும் கடை­பி­டித்தார்.


பிள­வு­பட்ட அரபு சமூ­கத்­திற்குப் பதி­லாக, இஸ்­லாத்தின் அடிப்­ப­டை­யையும் அர்த்­தத்­தையும் சுமக்­கின்ற, சகோ­த­ரத்­துவம், அமைதி மற்றும் தியா­கத்தை மனதில் கொண்டு உன்­னத விழு­மி­யங்கள் நிறைந்த சமு­தா­யத்தை உரு­வாக்க, 23 வரு­டங்­க­ளாக, முஹம்மத் நபி அவர்கள் தனது பிர­சங்கம், செயற்­பா­டுகள், தியாகம் மற்றும் வாழ்க்கை முன்­மா­திரி மூலம் தன்னை அர்ப்­ப­ணித்துக் கொண்டார். இனம், சாதி, நிறம் என்ற வகையில் எந்­த­வொரு நபரும் மற்­றொ­ரு­வரை விட உயர்ந்­த­வரோ தாழ்ந்­த­வரோ அல்ல என்ற சமத்­து­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட மகத்­து­வ­மான கருத்தே அவ­ரது போத­னை­களின் அடித்­த­ள­மாகும்.


சமூ­கத்தில் நிலவும் இடை­வெ­ளி­களை நீக்கி, மக்­களின் இத­யங்­களில் சமத்­து­வத்தை விதைப்­ப­தற்­கான போராட்­டத்தைத் தொடங்­கிய நபி­ய­வர்­களின் முன்­மா­திரி, இன்று நாம் எதிர்­கொள்ளும் சமூக சவால்­களை முறி­ய­டித்து, சமத்­துவம், சட்­டத்தை மதித்தல் மற்றும் நல்­லொ­ழுக்கம் நிறைந்த ஒரு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நமது முயற்­சி­களில் ஒளி­வி­ளக்­காக இருக்கும் என்று நான் நம்­பு­கிறேன்.

சகல விதத்­திலும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள எமது சமூ­கத்­திற்கு மனி­தா­பி­மா­னத்­தையும் அன்­பையும் வழங்கி புதிய நெறி­மு­றையின் அடிப்­ப­டையில் நாட்டை மேம்­ப­டுத்தும் எமது முயற்­சியில், எம்­முடன் இணைந்­துள்ள நீங்­களும் நபி­க­ளாரின் உண்­மை­யான வாழ்க்கை முன்­மா­தி­ரியை வாழ்க்­கைக்கு நெருக்­க­மாக எடுத்து, இந்த மீலாதுன் நபி தினத்தை மென்மேலும் அர்த்தமுள்ளதாக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.


இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிகரமான மீலாதுன் நபி தின வாழ்த்துகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை