மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்திற்கு இன்று(06.09.2025) பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேக கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் பாண்டிருப்பைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா மேனகா ( கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்) ஆவார்.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.