மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் MP கனகசபை காலமானார்


மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
 அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் தனது 86 வது வயதில் நேற்று (19/09/2025) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

(1939/03/20)ஆம்திகதி பிறந்த  இவர் ஓய்வுநிலை விவசாயத் திணைக்கள உத்தியோகத்தராவார். 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று  பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்தேசியத்தின் தீவிர பற்றாளராய் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் பயணித்த அன்னாரது இழப்பு பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.
புதியது பழையவை