அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அளிகம்பை பிரதேச மக்களுக்கான சுகாதார சேவை மற்றும் அப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார நிலையம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (25.10.2025) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகிலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆலையடிவேம்பு உதவிப் பிரதேச செயலாளர் எம்.ராமக்குட்டி, பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், ஆலையாடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர், அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.ஏ.நசீர், அளிகம்பை அன்னையர் ஆதரவு கழகத்தின் செயலாளர் ஏ.வினோதினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அளிகம்பை பிரதேசத்தில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அவ்வளாகத்தை சுத்தம் செய்தல். அப்பிரதேச மக்களின் நலன்கருதி வாரத்தில் மூன்று தினங்கள் குறித்த சுகாதார நிலையத்தில் கிளினிக் சேவையினை வழங்குதல் என தீர்மானிக்கப்பட்டது.