மின்சாரம் இல்லாமல் இருந்த ஆலயத்திற்கு போரதீவுப்பற்று பிரதேசசபையினால் சூரிய மின் விளக்கு.!

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமையப்பெற்ற 37ஆம் கிராமம் புதுமுன்மாரிச்சோலை கிராமத்தில் நாற்பது வருடங்களுக்கு மேலாக மின்சாரம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்பட்ட நாகதம்பிரான் ஆலயத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை (03) போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக உப தவிசாளர் த.கயசீலன் அவர்களினால் ஆல தலைவரிடம் சூரிய மின் விளக்கினை வழங்கிவைத்தனர்.

சூரிய மின்விளக்கினை போரதீவுப்பற்று பிரதேசசபை மின்னியலாளர்களினால் உடனடியாக ஆலயத்தில் பொருத்தப்பட்டன.

37ஆம் கிராமம் புது முன்மாரிச்சோலை நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகாமையில் 30 குடும்பங்கள் இருந்ததாகவும் மின்சாரம் இல்லாமல் காட்டு யானையின் அட்டகாசத்தினால் பொதுமக்கள் வெளியேறியுள்ளதாகவும் எமது ஆலயத்திற்கும் அன்டிய பகுதிக்கு மின்சாரம் இல்லாமல் நாற்பது வருடங்களுக்கு மேலாகின்றன இதனை பெற்றுத்தரக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களிடம் பெற்று தர கோரி இருந்தோம் .

அவர் எங்களுடைய ஆலயத்திற்கு மிகவிரைவில் பெற்றுத்தருவதாக கோரிஇருந்தார்.
என ஆலய தலைவர் தெரிவித்தனர்.

நேற்று போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக உபதவிசாளர் த.கயசீலன் அவர்களினால் சூரிய மின் விளக்கு ஆலயத்திற்கு வழங்கப்படு உடனடியாக பிரதேசசபையின் மின்னியலாளர்களின் உதவியோடு  மின் விளக்கு ஆலயத்திற்கு பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதியது பழையவை