மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு..!

வவுனியா - கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. 

திங்கட்கிழமை (27.10.2025)ஆம் திகதி  காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று உயிரிழந்து கிடந்ததை அவதானித்ததையடுத்து  அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும்  தகவலை வழங்கியுள்ளார். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு   வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர்.
புதியது பழையவை