மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் உள்ள Rajekka உணவகத்தில் நேற்றிரவு(12.10.2025) 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் உணவவமும் அதனோடு இணைந்திருந்த கடையும் முற்றாக ஏரிந்து சாம்பலாகியுள்ளது .
மின் ஒழுக்கு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினரும் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இத் தீவிபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.