களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (12.11.2025) காலை 9.40 மணியளவில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒன்று செட்டிபாளையம் முருகன் ஆலத்திற்கு முன்பாக பயணிக்கும் போது வீதியை கடந்து கொண்டிருந்த மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது மாடு படுகாயமடைந்து உயிருக்கு போராடி வரும் நிலையில் விபத்தில் சிக்கிய இளைஞரும் காயமடைந்துள்ளார்.