மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான வீதியோரம் உள்ள பழைமை வாய்ந்த ஆலமரக் கிளைகளை அகற்றும் பணிகள் புதன்கிழமை (12.11.2025) முன்னெடுக்கப்பட்டன.
குறித்த பகுதியால் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் காணப்பட்ட கிளைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் மூலம் அகற்றி அப்புறப்படுத்தப்பட்டன.
மரக்கிளைகளை அகற்றும் போது ஏற்பட்ட வாகனப் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்கு வரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் விஷேட கடமையில் ஈடுபட்டனர்.