வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட ஐவருக்கு இன்று(25.11.2025)நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலேயே மூவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.