பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதகாரியாக பொலிஸ் பரிசோதகர் அழககோன்(IP) சமய அனுஷ்டானங்களுடன் தமது கடமைகளை இன்று (05.11.2025)ஆம் திகதி காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.எம்.ஐ. ரத்நாயக்கா இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து பொலிஸ் மா அதிபரினால் புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று(05.11.2025) காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இஸ்லாமிய, இந்து, கிறிஸ்தவ, பௌத்த சமய அனுஷ்டானங்களுடன் புதிய பொறுப்பதிகாரி தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
பொலிஸ் நிலயத்தின் உயர் அதிகாரிகள் சமூக பிரமுகர்கள், பொலிஸ் உபதேசக்குழு உறுப்பினர்கள் என பலரும் கடமையேற்பு வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்.